நாட்டில் கரோனாவால் பெற்றோரை இழந்த 645 குழந்தைகள் மீட்பு
நாட்டில் இதுவரை கரோனாவால் பெற்றோரை இழந்த 645 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளதாக மக்களவையில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.
நாட்டில் இதுவரை கரோனாவால் பெற்றோரை இழந்த 645 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளதாக மக்களவையில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ஜூலை 19-ல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில், கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகள் குறித்த தகவலை எழுத்துப் பூர்வமாக மத்திய அமைச்சர் பதிலளித்துள்ளார்.
இதையும் படிக்க | தேர்தல் 2024: மோடிக்கு எதிராக நிறுத்தப்படுகிறாரா மம்தா?
Advertisement
Advertisement
“நாட்டில் ஏப்ரல் 2020 முதல் மே 2021 வரை கரோனாவால் பெற்றோரை இழந்த 645 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்தில் 158, ஆந்திரத்தில் 119, மகாராஷ்டிரத்தில் 83, மத்திய பிரதேசத்தில் 73 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளது.
மேலும், பிரதமரின் நிவாரண நிதியின் கீழ் அவர்களது கல்விச் செலவை அரசு ஏற்பதுடன், ரூ. 10 லட்சம் வைப்பு நிதியாக வங்கி கணக்கில் செலுத்தப்படும்”
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.