FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

கேஜரிவால், மணீஷ் சிசோடியா இன்று குஜராத் பயணம்!

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஆகிய இருவரும் இன்று குஜராத் செல்கின்றனர். 

Updated On : 22 ஆகஸ்ட் 2022, 9:38 am IST
பகிர்:

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஆகிய இருவரும் இன்று குஜராத் செல்கின்றனர். 

நடப்பாண்டு இறுதியில் குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளதை அடுத்து, தில்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் குஜராத்துக்கு அடிக்கடி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். 

இந்நிலையில், தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுடன் கேஜரிவால் இன்று குஜராத் செல்கிறார். ஆமதாபாத்தில் உள்ள ஹிம்மத்நகரில் கூட்டத்தில் உரையாற்ற உள்ளனர். செவ்வாய்க்கிழமை பாவ்நகரில் நடைபெறும் நகர்மன்றக் கூட்டத்திலும் கலந்துகொள்கின்றனர். 

Advertisement

Advertisement

தில்லி ஆம் ஆத்மி அரசின் கலால் கொள்கை குறித்த முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணையின் பிடியில் உள்ள மணீஷ் சிசோடியா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு லுக் அவுட் நோட்டீசும் பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

குஜராத் மக்களுக்கு இலவச மின்சாரம், இலவச கல்வி, குடும்பத் தலைவிகளுக்கு உதவித்தொகை உள்ளிட்ட வாக்குறுதிகளை ஆம் ஆத்மி அளித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments