முகப்பு
இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாதி சுட்டுக்கொலை

காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டார். 

Updated On : 4 ஜூன் 2022, 9:26 am IST
பகிர்:

காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டார். 

ஜம்மு- காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் ரிஷிபுரா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு வந்த தகவலையடுத்து அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 

அப்போது பதுங்கி இருந்த தீவிரவாதிகள் பாதுகாப்புப்படையினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தவே இரு தரப்பினருக்கும் இடையே நடந்த தாக்குதலில் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பைச் 
சேர்ந்த பயங்கரவாதி நிசார் காண்டே என்பவர் சுட்டுக்கொல்லப்பட்டார். கொல்லப்பட்ட பயங்கரவாதி ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பின் முக்கிய தளபதி என்று கூறப்படுகிறது. 

Advertisement

Advertisement

மேலும் அவரிடமிருந்து ஒரு ஏகே 47  துப்பாக்கி, ஆயுதங்கள், வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. காஷ்மீர் ஐ.ஜி. விஜய் குமார் இத்தகவலை தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.