FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

கோதுமை கொள்முதல் மே 31 வரை நீட்டிப்பு: பியூஷ் கோயல்

விவசாயிகளிடமிருந்து கோதுமை கொள்முதல் செய்வது மே 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக உணவு மற்றும் பொதுவிநியோகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். 

1 பிப்ரவரி 2024, 2:46 pm IST
பியூஷ் கோயல்
பகிர்:

விவசாயிகளிடமிருந்து கோதுமை கொள்முதல் செய்வது மே 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக உணவு மற்றும் பொதுவிநியோகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். 

மாநில அரசுகளின் கோரிக்கையை ஏற்று கோதுமை கொள்முதல் மே 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக பியூஷ் கோயல் அறிவித்துள்ளார்.

உலக அளவில் கோதுமையின் தேவை அதிகரித்ததாலும், உள்நாட்டில் பற்றாக்குறை ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையிலும் கோதுமை ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதிப்பதாக அறிவித்தது.

Advertisement

Advertisement

இதனால் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்று மாநில அரசுகள் மற்றும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. இதனால் போதிய அளவு கோதுமையை மத்திய அரசு கொள்முதல் செய்யத் தவறியதே இதற்குக் காரணம். கொள்முதல் நடந்திருந்தால், கோதுமை ஏற்றுமதியை தடை செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது என்று விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில், விவசாயிகளிடமிருந்து கோதுமை கொள்முதல் செய்வது மே 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்படும் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்துள்ளார். 

உக்ரைன் - ரஷியா போரால் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் உணவுப் பற்றாக்குறை அபாயம் நிலவுகிறது. அதிக அளவு கோதுமை உற்பத்தி நடைபெறும் உக்ரைனில்,  போர் நடைபெற்று வருவதால்  ஏற்றுமதி தேங்கியுள்ளது.

இதனால், அண்டை நாடுகளின் தேவைக்காக இந்தியாவின் ஏற்றுமதி அதிகரித்துள்ளது. இதன் எதிரொலியாக நடப்பு நிதியாண்டில் 1 கோடி டன் கோதுமையை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு இலக்கு நிா்ணயித்துள்ள நிலையில், இதுவரை 9,63,000 டன் கோதுமை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. 

கோதுமை ஏற்றுமதிக்காக மொராக்கோ, துனிசியா, இந்தோனேசியா, பிலிப்பின்ஸ், தாய்லாந்து, வியத்நாம், லெபனான் உள்ளிட்ட நாடுகளுடன் இந்தியா பேச்சுவாா்த்தை நடத்தி வந்தது.

உள்நாட்டு நிலைமையைக் கருத்தில்கொண்டு கோதுமை ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. அதே வேளையில், வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை டிஜிஎஃப்டி நீக்கியுள்ளது.

உள்நாட்டில் விலையைக் கட்டுப்படுத்தவும், வா்த்தகத்தை முறைப்படுத்தவுமே கோதுமை ஏற்றுமதிக்குத் தடை விதிக்கப்பட்டதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments