கோப்புப்படம் 
இந்தியா

வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்களின் ஏற்றுமதி 25% உயர்வு!

வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்களின் ஏற்றுமதி 25% உயர்ந்துள்ளதாக புள்ளியியல் தரவுகள் தெரிவிக்கிறது.

DIN

இந்தியாவில் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்களின் ஏற்றுமதி 25% உயர்ந்துள்ளதாக புள்ளியியல் தரவுகள் தெரிவிக்கிறது.

இந்தியாவில் வேளாண்மை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்களின் ஏற்றுமதி, கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், நடப்பு நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் 25 சதவீதம் அதிகரித்து 1,3771 மில்லியன் டாலர்களாக உள்ளது என்று புள்ளியியல் தரவுகள் தெரிவிக்கிறது.

பதப்படுத்தப்பட்ட பழங்கள் மற்றும் காய்கறிகள் 42.42 சதவீதம் (ஏப்ரல்-செப்டம்பர் 2022) குறிப்பிடத்தக்க வளர்ச்சி அடைந்தது. அதே நேரத்தில் புதிய பழங்கள் முந்தைய ஆண்டின் மாதங்களுடன் ஒப்பிடும்போது 4 சதவீத வளர்ச்சியை அடைந்துள்ளது என்று தரவுகள் தெரிவிக்கின்றன.

மேலும், தானியங்கள் மற்றும் இதர பதப்படுத்தப்பட்ட பொருள்கள் கடந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களுடன் ஒப்பிடும் போது 29.36 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளது.

ஆறு மாதங்களில் இறைச்சி, பால் மற்றும் கோழி தீவனப் பொருள்களின் ஏற்றுமதி 10.29 சதவீதமும், மற்ற தானியங்களின் ஏற்றுமதி 12.29 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளது. கோழி தீவனப் பொருள்களி்ல் மட்டும் 83 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளது.

பிற தானியங்களின் ஏற்றுமதி ஏப்ரல்-செப்டம்பர் 2021 இல் 467 மில்லியன் அமெரிக்க டாலரிலிருந்து, ஏப்ரல்-செப்டம்பர் 2022 இல்  525 மில்லியன் அமெரிக்க டாலராக அதிகரித்துள்ளது மற்றும் கால்நடைப் பொருள்களின் ஏற்றுமதி ஏப்ரல்-செப்டம்பர் 2021 இல் 1,903 மில்லியன் அமெரிக்க டாலரிலிருந்து ஏப்ரல்-2092 மில்லியன் அமெரிக்க டாலராக அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அழகு என்ற சொல்லுக்கு...

கங்கை கொண்ட சோழீசுவரம்!

நோய்களைத் தீர்க்கும் அம்மன்

சிங்கப்பூர் பெண்ணிடம் ரூ. 1.9 கோடி மோசடி செய்த இந்திய வம்சாவளிக்கு 23 மாதங்கள் சிறை!

வெடிகுண்டு மிரட்டல்: அம்பாலா நீதிமன்ற வளாகத்தில் சோதனை

SCROLL FOR NEXT