FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கார் மீது கற்கள் வீசி தாக்குதல்..!

ஆந்திரம் மாநில முன்னாள் முதல்வரும், தெலுங்குதேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடுவின் பாதுகாப்பு வாகனங்கள் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. 

Updated On : 5 நவம்பர் 2022, 11:28 am IST
பகிர்:


ஆந்திரம் மாநில முன்னாள் முதல்வரும், தெலுங்குதேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடுவின் பாதுகாப்பு வாகனங்கள் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. 

பொதுக்கூட்டம் ஒன்றில் பங்கேற்பதற்காக வெள்ளிக்கிழமை தமது பாதுகாப்பு வாகனங்களுடன் சந்திரபாபு நாயுடு பேரணியாக சென்றுக் கொண்டிருந்த போது, என்.டி.ஆர் மாவட்டம் நந்திகர்மா என்ற இடத்தில் அவரது பாதுகாப்பு வாகனங்கள் மீது கற்கள் வீசப்பட்டது. 

இந்த தாக்குதலில் நாயுடுவின் தலைமை பாதுகாப்பு அதிகாரி (சிஎஸ்ஓ) மதுபாபு என்பவர் காயமடைந்தார்.

Advertisement

Advertisement

அதிர்ஷ்டவசமாக சந்திரபாபு நாயுடு காயமின்றி தப்பினார். உடனே அருகில் இருந்த நபரிடம் இருந்த மைக்கை வாங்கிய நாயுடு, கற்களை வீசியவர்கள் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்தார்.

இந்த சம்பவம் நகரில் பதற்றத்தை ஏற்படுத்தியதை அடுத்து, ஜக்கையப்பேட்டை போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். 

தகவல் அறிந்து துணை காவல் ஆணையர் மேரி பிரசாந்தி மற்றும் பிற மூத்த காவல்துறை அதிகாரிகள் கூடுதல் காவலர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

கற்களை வீசியவர்கள் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்த சந்திரபாபு நாயுடு.

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை தோற்கடிக்க  சந்திரபாபு அழைப்பு: 
ஆந்திரம் மாநிலத்தில் அனைத்து பிரிவினரும் ஏதாவதொரு விதத்தில் சிக்கலை எதிர்கொண்டு வருவதால் வரும் தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை தோற்கடிக்க வேண்டும் என்று நாயுடு மாநில மக்களுக்கு அழைப்பு விடுத்தார்.

நந்திகர்மாவில் உள்ள காந்தி மையத்தில் நடைபெற்ற சாலைப் பேரணியில் உரையாற்றிய நாயுடு, மக்கள் அமைதியான சூழலை விரும்பினால், தெலுங்கு தேசம் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதே ஒரே வழி என்றார்.

நாரா லோகேஷ் கண்டனம்:  பாதுகாப்பு வாகனம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு நாயுடுவின் மகன் நாரா லோகேஷ் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பதிவில், “எதிர்க்கட்சித் தலைவர் சந்திரபாபுவின் பாதுகாப்பு வாகனம் மீது ரௌடி கும்பல் நடத்திய தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறேன். 

மேலும், “இது குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும். தாக்குதல் நடத்திய குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். தாக்குதலில் காயமடைந்த தலைமை பாதுகாப்பு அதிகாரி மது விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்” என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments