முகப்பு
இந்தியா

நாயை காரில் கட்டி இழுத்துச் சென்ற மருத்துவர்: வைரலாகும் விடியோ

தெரு நாயை காரில் கட்டி மருத்துவர் ஒருவர் இழுத்துச் சென்ற சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Updated On : 19 செப்டம்பர் 2022, 11:51 am IST
பகிர்:

தெரு நாயை காரில் கட்டி மருத்துவர் ஒருவர் இழுத்துச் சென்ற சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூர் மாவட்டத்தில் ரஜ்னீஷ் கால்வா என்ற பிரபல மருத்துவர், தனது காரில் நாயை கட்டி சாலையில் இழுத்துச் சென்றுள்ளார்.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த சாலையில் சென்ற மக்கள், காரை நிறுத்தி நாயை மீட்டனர். காயமடைந்த நாயை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisement

Advertisement

இதுகுறித்து விலங்குகள் நல அறக்கட்டளை அளித்த புகாரின் அடிப்படையில், மருத்துவர் மீது மிருகவதை தடுப்புச் சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து ரஜ்னீஷ் கால்வா கூறுகையில், தனது வீட்டின் அருகே இருந்த தெரு நாயை அப்புறப்படுத்தும் முயற்சியில்தான் இதுபோன்று செய்ததாக கூறியுள்ளார்.

பிரதான சாலையில் நாயை காரில் கட்டி இழுத்துச் சென்ற சம்பவம் அவ்வழியே சென்ற மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.