குறைந்தபட்ச ஆதார விலையை மேம்படுத்த குழு அமைக்கப்பட்டுள்ளது: வேளாண் அமைச்சர்
பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை மேம்பாடு குறித்து ஆலோசிக்க குழு அமைக்கப்பட்டுள்ளதாக மாநில வேளாண் அமைச்சர் கைலாஷ் சௌத்ரி மாநிலங்களவையில் இன்று (ஆகஸ்ட் 5) தெரிவித்தார்.
பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை மேம்பாடு குறித்து ஆலோசிக்க குழு அமைக்கப்பட்டுள்ளதாக மாநில வேளாண் அமைச்சர் கைலாஷ் சௌத்ரி மாநிலங்களவையில் இன்று (ஆகஸ்ட் 5) தெரிவித்தார்.
இது குறித்து மாநிலங்களவையில் அவர் கூறியதாவது: “ இயற்கை விவசாயம் மற்றும் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிப்பது தொடர்பாக அரசு சார்பில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவில் விவசாயிகள் சார்பில் பிரதிநிதிகளும், மத்திய,மாநில அரசு அதிகாரிகளும் இடம் பெற்றுள்ளனர். இந்தக் குழு குறைந்தபட்ச ஆதார விலை குறித்து ஆலோசித்து அதன் ஆலோசனைகளை அரசுக்கு வழங்கும். இதன்மூலம் விவசாயிகள் பயனடைவர்.” என்றார்.
இதையும் படிக்க: சீனர்களுக்கு விசா வழங்கியதில் முறைகேடு: சென்னையில் அமலாக்கத் துறை சோதனை
Advertisement
Advertisement
நாடாளுமன்ற கேள்வி நேரத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா, விவசாயிகளின் உற்பத்தி விலையைக் காட்டிலும் குறைந்தபட்ச ஆதார விலையை 200 சதவிகிதம் அதிகரிக்க அரசிடம் ஏதேனும் திட்டங்கள் உள்ளனவா என எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக மாநில வேளாண் அமைச்சர் கைலாஷ் சௌத்ரி இதனை தெரிவித்தார்.
இது தொடர்பாக கைலாஷ் சௌத்ரி மேலும் கூறியதாவது: “ஒவ்வொரு ஆண்டும் விவசாயத்திற்கு பட்ஜெட்டில் ஒதுக்கப்படும் தொகை அதிகரிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே, 1.32 லட்சம் கோடி விவசாயத்திற்காக அரசு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 2013-14ஆம் ஆண்டுகளில் வெறும் 27 ஆயிரம் கோடியாக இருந்த விவசாயத்திற்கான பட்ஜெட் தொகை இன்று 1.32 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. விவசாயத்திற்கு நிதி ஒதுக்குவதில் இந்தியா உலக நாடுகளில் முதல் பத்து இடங்களுக்குள் ஒன்றாக உள்ளது.” என்றார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.