வாட்ஸ்-ஆப் அட்மின்களுக்கு புதிய வசதி விரைவில் அறிமுகம்
வாட்ஸ்-ஆப் குழுக்களில் நீக்கிய தகவல்களை அட்மின்கள் மீட்டெடுக்கும் வசதியை ஏற்கனவே அறிமுகப்படுத்திய வாட்ஸ்-ஆப், தற்போது அட்மின்களுக்கு மேலும் ஒரு புதிய வசதியை அறிமுகப்படுத்துகிறது.
சான் ஃபிரான்சிஸ்கோ: வாட்ஸ்-ஆப் குழுக்களில் நீக்கிய தகவல்களை அட்மின்கள் மீட்டெடுக்கும் வசதியை ஏற்கனவே அறிமுகப்படுத்திய வாட்ஸ்-ஆப், தற்போது அட்மின்களுக்கு மேலும் ஒரு புதிய வசதியை அறிமுகப்படுத்துகிறது.
இதையும் படிக்க.. யுபிஐ பரிவர்த்தனைக்குக் கட்டணமா? ஆர்பிஐ தரும் விளக்கம்
ஒரு வாட்ஸ்-ஆப் குழுவில், யார் பதிவிட்ட ஒரு தகவலையும், அட்மினால் டெலீட் அல்லது நீக்கம் செய்ய முடியும். இந்த வசதி தற்போது பரிசோதனையில் உள்ளது. இது விரைவில் ஒரு சில பீட்டா டெஸ்டர்களுக்கு அறிமுகமாகவிருக்கிறது.
Advertisement
Advertisement
இந்த வசதி அனைவரின் வாட்ஸ்-ஆப்பிலும் வருவதற்கு சில காலம் ஆகலாம் என்றும் கூறப்படுகிறது.
இது குறித்து வாட்ஸ்-ஆப் நிறுவனம் கூறியிருப்பது என்னவென்றால், நீங்கள் ஒரு வாட்ஸ்-ஆப் குழுவின் அட்மினாக இருந்தாலும், அதில் வரும் மற்றவர்களின் தகவல்களை நீக்கம் செய்ய முடியாது. எனவே, இன்னும் சிறிது காலம் காத்திருங்கள். யார் பதிவிடும் தகவலையும் உங்களால் நீக்கம் செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.