பாபர் மசூதி தொடர்பான அனைத்து வழக்குகளும் முடித்து வைப்பு
பாபர் மசூதி தொடர்பான அனைத்து நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளும் முடித்து வைக்கப்பட்டதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பாபர் மசூதி தொடர்பான அனைத்து நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளும் முடித்து வைக்கப்பட்டதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் இருந்த பாபர் மசூதி கடந்த 1992-ஆம் ஆண்டு, டிசம்பர் 6-ஆம் தேதி கரசேவகர்களால் இடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, குஜராத் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் மதக் கலவரங்கள் வெடித்தன. அவற்றில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர்.
குறிப்பாக, மும்பை போன்ற நகரங்களில் குண்டு வெடிப்பு சம்பவங்களும் நடந்தது.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: தேசிய கல்விக் கொள்கையை உறுதியாக எதிர்க்கிறோம்: மு.க. ஸ்டாலின்
பாபர் மசூதி இடிக்கப்பட்டு 30 ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில், அச்சம்பவம் தொடர்பாக அரசு மற்றும் அரசு அதிகாரிகளின் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் அனைத்தும் முடித்து வைக்கப்பட்டதாக உச்சநீதிமன்றம் இன்று தெரிவித்துள்ளது.
மசூதி இடிப்பிற்குப் பின் எழுந்த வன்முறைப் போராட்டங்கள், தாக்குதல்கள் போன்ற பல்வேறு வழக்குகளில் 1,000-க்கும் மேற்பட்டவர்கள் சிறையில் அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.