இந்தியாவில் கரோனா மீட்பு விகிதம் 98.8% உயர்வு!
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 188 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதே காலகட்டத்தில் 141 பேர் குணமடைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புதுதில்லி: நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 188 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதே காலகட்டத்தில் 141 பேர் குணமடைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.
இதையும் படிக்க | ரயில்வேயை தனியார் மயமாக்கும் திட்டம் எதுவும் இல்லை: மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்
Advertisement
Advertisement
அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் புதிதாக 188 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. தற்போது நாட்டில் குணமடைந்தவர்களின் விகிதம் 98.8 சதவீதமாக உள்ளது. நாட்டில் தற்போது சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3,468 ஆக உள்ளது.
நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் கடந்த 24 மணி நேரத்தில் 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. இதுவரை, நாடு முழுவதும் 220 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்கள் பயனாளிகளுக்கு போடப்பட்டுள்ளது.