'ஒரு புகழ்பெற்ற நூற்றாண்டு கடவுளின் காலடியில் சேர்ந்திருக்கிறது' - மோடி உருக்கம்
ஒரு புகழ்பெற்ற நூற்றாண்டு கடவுளின் காலடியில் சேர்ந்திருக்கிறது என தனது தாயார் மறைவு குறித்து பிரதமர் நரேந்திர மோடி உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.
ஒரு புகழ்பெற்ற நூற்றாண்டு கடவுளின் காலடியில் சேர்ந்திருக்கிறது என தனது தாயார் மறைவு குறித்து பிரதமர் நரேந்திர மோடி உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடி இன்று(டிச.30) உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். அவருக்கு வயது 100.
ஹீராபென் மோடி உடல்நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம் (டிச. 28) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று அதிகாலை உயிரிழந்தார். நேற்று குஜராத்தில் யு.என். மேத்தா இதய நோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்துக்கு சென்று பிரதமர் மோடி தனது தாயை நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்தது குறிப்பிடத்தக்கது.
Advertisement
Advertisement
இந்நிலையில் தாயாரின் மறைவு குறித்து பிரதமர் மோடி, 'ஒரு புகழ்பெற்ற நூற்றாண்டு கடவுளின் காலடியில் சேர்ந்திருக்கிறது.. துறவியின் பயணமும், தன்னலமற்ற கர்மயோகியின் அடையாளமும், அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கையும் அடங்கிய அந்த மூன்று சொரூபங்களை என் தாயிடம் நான் எப்போதும் உணர்ந்திருக்கிறேன்.
அவருடைய 100வது பிறந்தநாளில் அவரைச் சந்தித்தபோது, அவர் ஒரு விஷயம் சொன்னார், அது எப்போதும் நினைவுக்கு வரும், புத்திசாலித்தனத்துடன் வேலை செய்யுங்கள், தூய்மையுடன் வாழுங்கள் என்பதே அது' எனப் பதிவிட்டுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.