தில்லியில் பொது இடங்களில் மது அருந்திய 600 பேர் மீது வழக்குப் பதிவு
தில்லியில் பொது இடங்களில் மது அருந்திய 600 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தில்லியில் பொது இடங்களில் மது அருந்திய 600 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதுகுறித்து காவல் ஆணையர் சமீர் சர்மா கூறுகையில்,
பொது இடங்களில் மது அருந்துவதால் அடிக்கடி இடையூறு ஏற்படுத்துவதுடன், அப்பகுதியில் அமைதி சீர்குலைப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. எனவே இது சட்டப்படி தண்டனைக்குரியது.
Advertisement
Advertisement
இதில், வார நாள்களை விட வார இறுதி நாள்களில் அதிகளவிலானோர் பொது இடங்களில் மது அருந்துவதாகவும், குடித்துவிட்டு வாகனத்தை ஓட்டி வருவதாகவும் தகவல்கள் வெளியானது.
அதன்படி வார இறுதி நாள்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வெளி மாவட்டப் பகுதியின் பொது இடங்களில் மது அருந்துபவர்களைக் கண்காணிக்க காவல்துறையினரால் ஒரு இயக்கம் நடத்தப்படுகிறது. வெளி மாவட்ட காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட 10 பகுதிகளில் வாகன ரோந்து நடத்தப்பட்டது.
அதில், கடந்த இரண்டு நாள்களில் மட்டும் 606 பேர் பொது இடங்களில் மது அருந்தியது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், இனிவரும் காலங்களில் பொது இடங்களில் மது அருந்த வேண்டாம் என பொதுமக்களிடம் அவர் கேட்டுக்கொண்டார்.