உ.பி.யில் விஷ சாக்லெட் சாப்பிட்ட 4 குழந்தைகள் பலி
இன்று விஷ சாக்லெட்டை சாப்பிட்ட ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 3 குழந்தைகள் உள்பட 4 குழந்தைகள் பலியாகினர்.
குஷிநகர் (உ.பி.): உத்தர பிரதேசத்தில் விஷ சாக்லெட்டை சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 குழந்தைகள் உள்பட 4 குழந்தைகள் பலியாகினர். அவர்கள் வீட்டிற்கு வெளியே வீசப்பட்ட சாக்லெட்டை சாப்பிட்டதால் இறந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காஸ்யா காவல்துறை வட்டத்திற்குட்பட்ட லத்தூர் தோலாவில் 4 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளதோடு, விசாரணைக்கு உத்தரவிட்டு, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கவும், இந்த விவகாரத்தில் தேவையான நடவடிக்கை எடுக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
Advertisement
Advertisement
குழந்தைகளின் உயிரிழப்புக்கு ஆம்புலன்ஸ் வருவதில் ஏற்பட்ட தாமதமும் ஒரு காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.