FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

கர்நாடகத்தில் மிகப்பெரிய போலி மருந்து விற்பனை கும்பல் கண்டுபிடிப்பு! அதிர்ச்சியூட்டும் தகவல்கள்

கர்நாடகத்தில் மிகப்பெரிய போலி மருந்து விற்பனை கும்பல் கண்டுபிடிக்கப்பட்டதன் பின்னணி

Updated On : 19 ஆகஸ்ட் 2026, 12:06 pm IST
போலி மருந்துகள் - பிரதி படம் - ANI
பகிர்:

சாதாரண மருந்துகளை வாங்கி, அதற்கு சர்வதேச மருந்து நிறுவனப் பெயர்களின் லேபிள்கள் ஒட்டப்பட்டு, கர்நாடகத்தில், போலி மருந்துகள் விநியோகம் செய்யப்பட்டு வந்த அதிர்ச்சித் தகவல் வெளியாகியிருக்கிறது.

ஹிமாச்சல், தெலங்கானா மற்றும் இதர மாநிலங்களில் தயாரிக்கப்படும் சாதாரண மருந்துகளை வாங்கி, அதற்கு, சர்வதேச மருந்து நிறுவனங்களின் லேபிள்கள் ஒட்டப்பட்டு, கர்நாடகத்தில் உள்ள மருத்துவமனைகள், மருந்து கடைகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருவதாக சுகாதாரத் துறை அமைச்சர் காதர் குற்றம்சாட்டியிருக்கிறார்.

இது குறித்து சிறப்பு விசாரணைக் குழு அமைத்து விசாரணை நடத்த பரிசீலித்து வருவதாகவும், இது சர்வதேச மற்றும் மாநில அளவில் நடைபெறும் மிகப்பெரிய மோசடி என்றும் குறிப்பிடுகிறார்.

Advertisement

Advertisement

ஒரு நாளைக்கு ரூ.5 கோடி மதிப்பிலான போலி மருந்துகள் விநியோகிக்கப்படுகிறது. ஏற்கனவே எத்தனை கோடி மதிப்பிலான போலி மருந்துகளை மக்களைச் சென்றடைந்துள்ளது என்பதுதான் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது என்று கூறும் அமைச்சர், இந்த போலி மருந்து கும்பல் முழுவதையும் கண்டுபிடித்து அழித்தொழிக்க வேண்டும் என்றும் இதற்கு இடையே செயல்படுபவர்களையும் கண்டுபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார்.

பிடாடியில் உள்ள பண்ணை வீடு ஒன்றில், ரூ.4.91 கோடி மதிப்பிலான மருந்துகள் சர்வதேச மருந்துகளின் லேபிள்கள் ஒட்டப்பட்டு தயாராகி வந்ததை, உணவு மற்றும் மருந்து தரக் கட்டுப்பாட்டு ஆணையத்தின் மருந்து அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.

இதர மாநிலங்களிலிருந்து மலிவான மருந்துகளை வாங்கி வரும் இந்த கும்பல், அதற்கு சர்வதேச, இறக்குமதி செய்யப்படும் விலை அதிகம் கொண்ட மருந்துகளின் லேபிள்களை ஒட்டி விநியோகித்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

summary

Massive counterfeit medicine racket uncovered in Karnataka! Shocking details.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments