FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

தமிழர்களைச் சுட்டுக் கொன்ற கர்நாடக அரசுக்கு கண்டனம்: மார்க்சிஸ்ட் கம்யூ.

கர்நாடகத்தில் மாநில வனத்துறையால் தமிழர்கள் மூவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்தது குறித்து...

Updated On : 16 ஆகஸ்ட் 2026, 12:31 pm IST
கர்நாடகத்தில் வனத்துறை அலுவலகம் முற்றுகை - ENS
பகிர்:

கர்நாடகத்தில் தமிழர்கள் 3 பேர் மாநில வனத்துறையால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு தமிழ்நாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

கர்நாடகத்தில் ஹனூர் வனப்பகுதியில் விலங்குகளை வேட்டையாடியதால் மூவரை சுட்டுக் கொன்றதாக மாநில வனத்துறையினர் கூறினர். ஆனால், சுட்டுக் கொல்லப்பட்ட மூவரும் அப்பாவி பொதுமக்களே எனக் கூறிம் அவர்களின் குடும்பத்தினரும் கிராம மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், வனத்துறை அலுவலகத்தையும் கிராம மக்கள்

இதுகுறித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, "கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம், ஹானூர் தாலுகா, தோமையார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த, தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட விவசாயிகள் வழக்கமாக மாடு மேய்க்கும் வனப்பகுதிக்குள் காணாமல்போன மாடுகளைத் தேடிச் சென்ற அந்தோணி ராஜ், குமார், ஜான் ஆகியோரை கர்நாடக மாநில வனத்துறையினர் சனிக்கிழமையில் சுட்டுக் கொலை செய்திருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.

Advertisement

Advertisement

அந்தோணி | குமார் | ஜான் - ENS

தங்கள் குற்றத்தை மறைக்க, அவர்கள் வேட்டையாடினார்கள் என்று வனத்துறையினர் பொய்யான குற்றச்சாட்டைத் தெரிவிக்கின்றனர்.

இந்தத் துப்பாக்கிச் சூட்டுக் கொலையை எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. சம்பந்தப்பட்ட வனத்துறையினரைப் பணிநீக்கம் செய்து கைது செய்ய வேண்டும்.

கொல்லப்பட்டவர்கள் தமிழர்கள் என்ற அடிப்படையில், தமிழ்நாடு அரசு தனது கண்டனத்தைக் கர்நாடக அரசிடம் தெரிவிக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.

summary

CPIM condemn Karnataka government for shooting and killing Tamils

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments