முகப்பு
இந்தியா

139 ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை!

சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் கடந்த 139 ஆவது நாள்களாக மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல்  ரூ.102.63 ஆகவும், டீசல் ரூ.94.24 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

Updated On : 7 அக்டோபர் 2022, 9:31 am IST
139 ஆவது நாளாக மாற்றமில்லாமல் தொடரும் பெட்ரோல், டீசல் விலைகள் (கோப்புப்படம்)
பகிர்:

சென்னை: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் கடந்த 139 ஆவது நாள்களாக மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல்  ரூ.102.63 ஆகவும், டீசல் ரூ.94.24 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப, உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலையை, நாள்தோறும் நிர்ணயம் செய்து வருகின்றன. 

கடந்த மே 21 ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்,  பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ. 9 ஆகவும், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.7.50 ஆகவும் குறைக்கப்படும் என அறிவித்தார்.

Advertisement

Advertisement

அதனைத் தொடர்ந்து சென்னையில் (மே. 22) பெட்ரோல் ரூ.8.22 காசு குறைந்து ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63 ஆகவும், டீசல் லிட்டருக்கு ரூ.6.70 காசு குறைந்து ரூ.94.24 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது. 

இந்நிலையில், தொடர்ந்து 139 ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனையாகி வருகின்றது. 

வெள்ளிக்கிழமை நிலவரப்படி (அக்.7) பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 ஆகவும், டீசல் ரூ.94.24 ஆகவும் விற்பனையாகி வருகின்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments