உ.பி. பாஜக எம்எல்ஏ மாரடைப்பால் காலமானார்
உத்தரப்பிரதேச பாஜக எம்எல்ஏ அரவிந்த் கிரி செவ்வாய்க்கிழமை மாரடைப்பால் காலமானார்.
உத்தரப்பிரதேச பாஜக எம்எல்ஏ அரவிந்த் கிரி செவ்வாய்க்கிழமை மாரடைப்பால் காலமானார்.
உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த அரவிந்த் கிரி, உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், சிகிச்சைக்காக லக்னெளவுக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது சீதாபூர் அருகே செல்லும் வழியில் கிரி உயிரிழந்தார்.
லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் உள்ள கோலா கோக்ரநாத் சட்டப்பேரவைத் தொகுதியில் இருந்து 5 முறை எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
Advertisement
Advertisement
பாஜக எம்எல்ஏவின் மறைவுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார்.
'அரவிந்த் கிரியின் மறைவு துரதிர்ஷ்டவசமானது. அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். கடவுள் ஸ்ரீராமர் தனது காலடியில் அவருக்கு இடம் கொடுக்கட்டும், அவரை இழந்து வாடும் குடும்ப உறுப்பினர்களுக்கு தாங்கும் வலிமையை வழங்கட்டும். இந்த அளவிட முடியாத இழப்பு, ஓம் சாந்தி' என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிக்க | கைம்பெண்கள், ஆதரவற்ற மகளிர் நல வாரியம் அமைக்க அரசாணை வெளியீடு
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.