FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

உ.பி. பேரவை நோக்கி அகிலேஷ் யாதவ் தலைமையில் பேரணி

உத்தரப் பிரதேச சட்டப்பேரவை நோக்கி அகிலேஷ் யாதவ் தலைமையில் சமாஜ்வாதி கட்சியினர் பேரணியாக செல்கின்றனர்.

Updated On : 19 செப்டம்பர் 2022, 11:03 am IST
பகிர்:

உத்தரப் பிரதேச சட்டப்பேரவை நோக்கி அகிலேஷ் யாதவ் தலைமையில் சமாஜ்வாதி கட்சியினர் பேரணியாக செல்கின்றனர்.

உ.பி.யில் சட்டம் - ஒழுங்கு சீரழிந்து விட்டதாக முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான  அரசின் மீது எதிர்க்கட்சித் தலைவரும் சமாஜ்வாதி தலைவருமான அகிலேஷ் யாதாவ் தொடர்ந்து குற்றச்சாட்டு எழுப்பி வருகிறார்.

இந்நிலையில், இன்று உ.பி. சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில், அரசுக்கு எதிராக பதாகைகளை ஏந்தி பேரவை நோக்கி சமாஜ்வாதி கட்சி அலுவலகத்திலிருந்து அகிலேஷ் யாதவ் தலைமையில் அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் உள்பட ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பேரணியாக செல்கின்றனர்.

Advertisement

Advertisement

இந்த பேரணி குறித்து உ.பி. துணை முதல்வர் மௌரியா கூறுகையில்,

சமாஜ்வாதி போராட்டத்திற்கும் மக்களின் நலனுக்கும் தொடர்பில்லை. பிரச்னையை பற்றி விவாதிக்க வேண்டுமானால், சட்டப்பேரவையில் அதைச் செய்யலாம். எங்கள் அரசு விவாதத்திற்கு தயாராக உள்ளது. இதுபோன்ற போராட்டங்கள் மக்களுக்கு பிரச்னைகளையே உருவாக்கும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments