அசாம்: பிரம்மபுத்திரா ஆற்றில் படகு கவிழ்ந்ததில் 6 பேர் மாயம்!
அசாமின் துப்ரி மாவட்டத்தில் உள்ள பிரம்மபுத்திரா ஆற்றில் படகு கவிழ்ந்ததில் பலர் மாயமாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அசாமின் துப்ரி மாவட்டத்தில் உள்ள பிரம்மபுத்திரா ஆற்றில் படகு கவிழ்ந்ததில் பலர் மாயமாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து துப்ரியின் கூடுதல் துணை ஆணையர் மனாஷ் குமார் சைக்கியா கூறுகையில்,
பிரம்மபுத்திரா ஆற்றில் கட்டுமானத்தில் உள்ள துப்ரி-புல்பரியா பாலத்தில் இருந்து 3 கி.மீ தொலைவில் உள்ள அடபாரி என்ற இடத்தில் படகு சென்றுகொண்டிருந்தபோது, அங்கிருந்த பாலத்தின் மீது படகு மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
Advertisement
Advertisement
இந்த சம்பவத்தில் 6 பேர் மாயமாகியுள்ளனர். படகில் சுமார் 50 பேர் இருந்ததாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக் குழுவினர் மாயமானவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விபத்தில் இதுவரை 15 பேரை மீட்டுள்ளனர். தொடர்ந்து தேடுதல் பணி நடந்து வருகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.