முகப்பு
இந்தியா

பானிபட்டில் எரிவாயு சிலிண்டர் தீப்பிடித்தது: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி! 

பானிபட்டில் சமையல் எரிவாயு உருளை கசிந்ததால் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Updated On : 12 ஜனவரி 2023, 11:37 am IST
பகிர்:

பானிபட்டில் சமையல் எரிவாயு உருளை கசிந்ததால் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பானிபட் மாவட்டம் பிச்பாரி கிராமத்திற்கு அருகில் உள்ள கேம்ப் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். 

உயிரிழந்தவர்களில் தம்பதியர் உள்பட அவர்களது நான்கு குழந்தைகள் என மொத்தம் 6 பேர் இந்த சம்பவத்தில்  உயிரிழந்துள்ளனர்.

Advertisement

Advertisement

சிலிண்டர் கசிவு காரணமாக வீட்டில் தீப்பிடித்ததாகவும், நகரின் குடியிருப்பு பகுதியில் வசித்து வந்த குடும்பம் மேற்கு வங்கத்திலிருந்து குடிபெயர்ந்ததாகவும் அவர் கூறினார்.

தம்பதியர் இருவரும் பானிபட்டில் உள்ள தொழிற்சாலையில் வேலை செய்து வந்தனர். வீட்டிலிருந்து புகை வருவதைக் கண்டு அக்கம் பக்கத்தினர் சிலர் காவல் துறை மற்றும் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து சேருவதற்குள் பாதிக்கப்பட்டவர்கள் தீயில் எரிந்து சாம்பலாகினர். 

பலியானவர்கள் அப்துல், 45, அவரது 40 வயது மனைவி, 18 மற்றும் 16 வயதுடைய இரு மகள்கள் மற்றும் 12 மற்றும் 10 வயதுடைய இரண்டு மகன்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.