FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

பஞ்சாப் எல்லையில் 5 கிலோ ஹெராயினுடன் வந்த ட்ரோனை சுட்டுவீழ்த்திய பாதுகாப்புப் படையினர்

பஞ்சாபில் இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லை அருகே 5 கிலோ ஹெராயினுடன் வந்த ட்ரோனை பாதுகாப்புப் படையினர் சுட்டுவீழ்த்தினர்.

Updated On : 22 ஜனவரி 2023, 6:39 pm IST
கோப்புப்படம்
பகிர்:

பஞ்சாபில் இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லை அருகே 5 கிலோ ஹெராயினுடன் வந்த ட்ரோனை பாதுகாப்புப் படையினர் சுட்டுவீழ்த்தினர்.

பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லைக்கு அருகிலிருந்து 5 கிலோ எடையுள்ள ஹெராயின் போதைப்பொருளுடன் ட்ரோன் ஒன்று இன்று அதிகாலை 4 மணியளவில் வந்ததுள்ளது. அப்போது இதன் சத்தத்தைக் கேட்டு சுதாகரித்துக்கொண்ட எல்லைப் பாதுகாப்புப் படை மற்றும் அமிர்தசரஸ் காவல்துறையின் கூட்டு ரோந்துக் குழுவினர் கக்கர் கிராமத்தில் உள்ள லோபோக் பகுதியில் ட்ரோனை சுட்டு வீழ்த்தினர்.

மேலும் 5 கிலோ எடையுள்ள ஹெராயின் போதைப்பொருள்களையும் அவர்கள் கைப்பற்றியுள்ளனர். 

Advertisement

Advertisement

இத்தகவலை பஞ்சாப் டிஜிபி தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். "ஏகே-47ல் இருந்து மொத்தம் 12 ரவுண்டுகள் சுடப்பட்டதில் 2 பேர் கைது செய்யப்பட்டனர். கண்டுபிடிக்கப்பட்ட ட்ரோன், அமெரிக்கா மற்றும் சீனாவில் தயாரிக்கப்பட்ட உதிரிபாகங்களுடன் கூடியது. என்று அவர் மேலும் கூறியுள்ளார். முன்னதாக ஜனவரி 19 ஆம் தேதி, ராஜஸ்தானின் ஸ்ரீ கங்காநகரில் உள்ள இந்திய-பாகிஸ்தான் எல்லையில் ட்ரோன் பிடிபட்டதில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

மேலும் 6.150 கிலோ ஹெராயின் போதைப்பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டது, 3 பேர் தலைமறைவாகினர். இதுவரை கடத்தலில் சிக்கிய அனைத்து கடத்தல்காரர்களும் பஞ்சாபை சேர்ந்தவர்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments