ராஜஸ்தான்: 4-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பாஜக!
ராஜஸ்தானில் இரண்டு வேட்பாளர்கள் மட்டுமே அடங்கிய 4-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பாஜக
ராஜஸ்தானில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் 4-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று (நவம்பர் 3) வெளியிட்டுள்ளது பாஜக.
இந்த பட்டியலில் 2 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளனர். தோடபீம் தொகுதியில் ராம் நிவாஸ் மீனா என்பவரும், ஷியோ தொகுதியில் ஸ்வரூப் சிங் காரா என்பவரும் பாஜக சார்பில் போட்டியிடுகின்றனர்.
முன்னதாக, கடந்த அக்.10-ம் தேதி 41 வேட்பாளர்கள் அடங்கிய முதல் கட்ட வேட்பாளர் பட்டியலையும், அக்.21-ம் தேதி 83 வேட்பாளர்கள் அடங்கிய இரண்டாவது வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டது.
நேற்று (நவம்பர் 2) மாலை 58 வேட்பாளர்கள் அடங்கிய 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்ட நிலையில், இன்று (நவம் 3) இரண்டு வேட்பாளர்களின் பெயர்கள் மட்டுமே உள்ள 4-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.
200 உறுப்பினர்களைக் கொண்ட ராஜஸ்தான் சட்டப்பேரவைக்கு நவம்பர் 25-ம் தேதி தேர்தல் நடத்தப்பட்டு டிசம்பர் 3-ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.
2018-ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் 99 இடங்களிலும், பாஜக 73 இடங்களிலும் வென்றது. பகுஜன் சமாஜ் மற்றும் சுயேட்சை எம்.எல்.ஏக்களின் ஆதரவோடு காங்கிரசை சேர்ந்த அசோக் கெலாட் ஆட்சியமைத்தது குறிப்பிடத்தக்கது.