FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

உத்தரகண்ட் சுரங்கப் பாதை விபத்து: ஆய்வுப்பணியை தொடங்கிய நிபுணர்கள் குழு!

உத்தரகண்ட் சுரங்கப் பாதை விபத்து தொடர்பாக நிபுணர்கள் குழு ஆய்வுப்பணியை தொடங்கியுள்ளது.

2 பிப்ரவரி 2024, 8:50 am IST
பகிர்:

உத்தரகண்ட் சுரங்கப் பாதை விபத்து தொடர்பாக நிபுணர்கள் குழு ஆய்வுப்பணியை தொடங்கியுள்ளது.

உத்தரகண்ட் மாநிலம், உத்தரகாசியில் பிரம்மகால்-யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் சில்க்யாரா, தண்டல்கான் பகுதிகளுக்கு இடையே சுரங்கப் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இப்பணியில் 40 தொழிலாளா்கள் ஈடுபட்டிருந்தனா்.

இந்தச் சுரங்கப் பாதையின் ஒரு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை மண் சரிவு ஏற்பட்டது. இந்த விபத்தில் தொழிலாளா்கள் சிக்கிக் கொண்டனா்.

Advertisement

Advertisement

அவா்களை மீட்கும் பணியில் மத்திய அரசும், உத்தரகண்ட் மாநில அரசும் ஈடுபட்டு வருகிறது. சுரங்கப் பாதையில் இருந்து தொழிலாளா்களை பாதுகாப்பாக வெளியே கொண்டு வருவதற்கு ஒரு வழியை ஏற்படுத்தும் முயற்சியாக, பெரிய குழாயைச் செலுத்தும் பணியில் மீட்புக் குழு இறங்கியது.

40 தொழிலாளா்களை மீடக மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்புக்குழு 3-வது நாளாக ஈடுபட்டு வருகிறது.

தொழிலாளா்களுக்கு அந்தக் குழாய் வழியாக உணவு, குடிநீா் ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன. சுரங்கப் பாதையில் சிக்கியுள்ள தொழிலாளா்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், சில்க்யாரா சுரங்கப்பாதையில் ஏற்பட்ட மண் சரிவுக்கான காரணங்களை ஆய்வு செய்ய, உத்தரகண்ட் அரசு அமைத்த குழுவில் உள்ள நிபுணர்கள் ஆய்வு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

இந்த சிறப்புக் குழு சுரங்கப்பாதை மற்றும் அதற்கு மேல் உள்ள மலைப்பகுதியை ஆய்வு செய்து வருகிறது.

சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள தொழிலாளர்களிடம் பேசியதாகவும், 40 தொழிலாளர்களும் நலமாக இருப்பதாக அவர்கள் உறுதியளித்ததாகவும் உத்தரகண்ட் மாநில பேரிடர் மீட்புப்படை அதிகாரி மணிகாந்த் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.சிக்கிய தொழிலாளர்கள் விரைவில் மீட்கப்படுவார்கள் என்று மிஸ்ரா கூறினார்.

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் சில மருந்துகள் இன்று தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments