FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

உக்ரைன் மீதான தாக்குதல்களை 3 நாள்கள் நிறுத்தி வைக்க ரஷிய அதிபர் உத்தரவு!

உக்ரைன் மீதான தாக்குதல்களை 3 நாள்களுக்கு நிறுத்தி வைக்க ரஷிய அதிபர் புதின் உத்தரவிட்டுள்ளார்.

5 செப்டம்பர் 2026, 6:15 pm IST
ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் - கோப்புப் படம்
பகிர்:

உக்ரைன் மீதான தாக்குதல்களை 3 நாள்களுக்கு நிறுத்தி வைக்க ரஷிய அதிபர் புதின் உத்தரவிட்டுள்ளார்.

4 ஆண்டுகளுக்கும் மேலாக ரஷியா- உக்ரைன் இடையே போர் நீடித்து வரும் வரும் நிலையில், போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான அமைதி ஒப்பந்தத்தை முன்னெடுக்க அமெரிக்காவின் சிறப்பு தூதர்கள் ரஷியா மற்றும் உக்ரைனுக்கு பயணம் மேற்கொள்வதாகச் செய்திகள் வெளியாகின.

நேட்டோ அமைப்பில் உறுப்பினராக இணைய உக்ரைன் முயற்சித்தது. இது, மேற்குலக நாடுகளுடன் இணைந்து உக்ரைனை அச்சுறுத்தும் முயற்சி என குற்றம் சாட்டிய ரஷியா, உக்ரைன் மீது போரைத் தொடங்கியது.

Advertisement

Advertisement

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் ஆயுதத் துணையோடு போரிடும் உக்ரைன், அசுர பலத்துடன் உள்ள ரஷியாவின் தாக்குதலுக்கு தற்போது வரை ஈடுகொடுத்து வருகிறது.

சமீப மாதங்களில் இந்தப் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்க சிறப்புப் பிரதிநிதிகள் மூலம் பேச்சுவார்த்தை நடத்தி போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சி செய்துள்ளார்.

போர்நிறுத்தம் தொடர்பாக இரு நாட்டுத் தலைவர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்த சிறப்புப் பிரதிநிதி ஸ்டீவ் விட்காஃப் மற்றும் மருமகன் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் ரஷியா மற்றும் உக்ரைனுக்குப் பயணம் மேற்கொள்கின்றனர்.

இதனைத் தொடந்து, உக்ரைன் மீது அடுத்த 3 நாள்களுக்குத் தாக்குதல்களை நிறுத்தி வைக்க ரஷிய அதிபர் புதின் உத்தரவிட்டுள்ளார்.

அமெரிக்கப் பிரதிநிதிகளின் வருகையைத் தொடர்ந்து, புதினின் இந்த அறிவிப்பு போர் நிறுத்தம் தொடர்பான முக்கியத்துவம் வாய்ந்த முடிவாகப் பார்க்கப்படுகிறது.

இதுபற்றிய அதிகாரப்பூர்வ உத்தரவின்படி, செப்டம்பர் 5 நள்ளிரவு முதல் உக்ரைன் மீது தாக்குதல் நடத்துவதைத் தவிர்க்குமாறு ரஷியப் படைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

summary

Russian President Putin has ordered a three-day halt to attacks on Ukraine.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments