FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

உக்ரைன் மீதான ரஷிய தாக்குதலில் இந்தியர் உள்பட 12 பேர் பலி!

உக்ரைன் மீதான ரஷிய தாக்குதலில் இந்தியர் உள்பட 12 பேர் பலியானது குறித்து...

1 செப்டம்பர் 2026, 4:10 pm IST
ரஷியாவின் தாக்குதலால் சேதமடைந்த கட்டமைப்புகள். - படம் - ஏபி
பகிர்:

உக்ரைன் மீதான ரஷிய தாக்குதலில் ஒரு இந்தியர் உள்பட 12 பேர் பலியானதாக அந்நாட்டு அதிபர் ஜெலென்ஸ்கி இன்று (செப். 1) தெரிவித்தார்.

ரஷியா - உக்ரைன் இடையே கடந்த 2022 ஆம் ஆண்டு பிப் 24 அன்று தொடங்கிய போர் தற்போதுவரை தொடர்ந்து வருகிறது. இதைத் தொடர்ந்து, உக்ரைனின் பொருளாதாரத்தை உருக்குலைக்கும் நோக்கில் தலைநகர் கீவ் மீது தொடர்ந்து 6 ஆவது நாளாக ரஷிய படைகள் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகின்றன. 

இந்தத் தாக்குதலின் ஒரு பகுதியாக திங்கள்கிழமை (ஆக. 31) நள்ளிரவு தொடங்கி செவ்வாய்க்கிழமை காலை வரை உக்ரைனின் தலைநகர் கீவ் மற்றும் பிற முக்கிய நகரங்களின் மீது ரஷியா நடத்திய தாக்குதலில் ஒரு இந்தியர் உள்பட 12 பேர் பலியாகியுள்ளனர்.

Advertisement

Advertisement

இதுகுறித்து உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்ததாவது:

ஒரு இந்தியர் உள்பட 12 பேர் ரஷியாவின் இந்தத் தாக்குதலில் பலியாகினர். நூற்றுக் கணக்கான மக்கள் காயமடைந்துள்ளனர். தனது அன்புக்குரியர்வர்களை இழந்து வாடும் குடும்பங்களுக்கு எனது இரங்கல்கள்.

ஆளில்லா விமானங்கள் உள்பட ரேடார் ஏவுகணைகள் போன்றவையும் இந்தத் தாக்குதல்களுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன. உக்ரைன் மக்களுக்கு எப்போதும் அழிவை ஏற்படுத்தும் மோசமான தாக்குதல்களை ரஷியா தொடர்ந்து நடத்தி வருகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, அங்கு வசிக்கும் மக்கள் வெளியேற்றப்படும் நிலையில் இதுவரை 300 க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

summary

President Zelensky said today (September 1) that 12 people, including an Indian, were killed in the Russian attack on Ukraine.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments