முகப்பு
இந்தியா

11-வது நாளாக முடங்கிய நாடாளுமன்றம்! நிலவரம் என்ன?

மணிப்பூர் நிலவரம் தொடர்பாக எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளி காரணமாக மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. 

Updated On : 3 ஆகஸ்ட் 2023, 12:12 pm IST
மக்களவையில் தொடர் அமளி: நாளை வரை அவை ஒத்திவைப்பு
பகிர்:

மணிப்பூர் நிலவரம் தொடர்பாக எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளி காரணமாக மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. 

நாடாளுமன்ற  மழைக்கால கூட்டத் தொடா் கடந்த ஜூலை 20-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். 

இன்று காலை மக்களவை கூடிய உடனே மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். தொடர் அமளி காரணமாக மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. 

Advertisement

Advertisement

எதிர்க்கட்சிகளின் அமளிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா இரண்டாவது நாளாக இன்று அவைக்கு வரவில்லை. 

அதுபோல, மணிப்பூா் நிலவரம் குறித்து பிரதமா் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க முன்வராததைக் கண்டித்து மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தன. 

எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக நாடாளுமன்றம் 11-வது நாளாக இன்று முடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

நாடாளுமன்றம் தொடங்கியது முதலே மணிப்பூர் விவகாரத்திற்கு தீர்வு காண வேண்டும், மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரி வருகின்றன. மேலும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடந்த வாரம் மணிப்பூருக்கு நேரடியாக சென்று வந்ததும் குறிப்பிடத்தது. 

எனவே, மணிப்பூர் விவகாரத்திற்கு தீர்வு கிடைக்கும் வரை எதிர்க்கட்சிகள் அமளி காரணமாக இந்த நாடாளுமன்ற கூட்டத்தொடர் முழுவதும் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.