குடிநீர் விநியோக திட்டத்துக்கு ரூ.62 கோடி ஒதுக்கீடு: அசோக் கெலாட்
குடிநீர் விநியோகம் தொடர்பான பணிகளுக்காக ராஜஸ்தானின் ஜோத்பூர் நகருக்கு ரூ.62.28 கோடி ஒதுக்கி அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் உத்தரவிட்டுள்ளதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடிநீர் விநியோகம் தொடர்பான பணிகளுக்காக ராஜஸ்தானின் ஜோத்பூர் நகருக்கு ரூ.62.28 கோடி ஒதுக்கி அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் உத்தரவிட்டுள்ளதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: எந்த ஒரு சிரமமின்றி அனைவருக்கும் குடிநீர் விநியோகம் செய்யும் பணியில் அரசு தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளது. பல்வேறு குடிநீர் விநியோகம் தொடர்பான பணிகளுக்காக முதல்வர் ரூ.62.28 கோடி ஒதுக்கியுள்ளார். இதன்மூலம் புதிதாக குடிநீர் குழாய் அமைக்கப்பட்டு ஜோத்பூரின் லுனி பகுதிக்கு குடிநீர் விநியோகம் கிடைக்க வழிவகை செய்யப்படும். ஏற்கனவே அந்த பகுதியில் உள்ள பழைய குடிநீர் விநியோக குழாய்கள் ரூ.38.93 கோடி செலவில் விரிவுப்படுத்தப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: உத்யான் விரைவு ரயிலில் தீ விபத்து!
Advertisement
Advertisement
நீர்ப்பாசன திட்டத்துக்காக ரூ.33.95 கோடி ஒதுக்க முதல்வர் அசோக் கெலாட் ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.