செப். 18 முதல் 22 வரை நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர்!
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் செப்டம்பர் 18 முதல் 22 ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் செப்டம்பர் 18 முதல் 22 ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் சமீபத்தில் முடிவடைந்த நிலையில் சிறப்புக் கூட்டத்தொடர் நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தனது ட்விட்டர் பக்கத்தில், 'நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடர் (17-வது மக்களவையின் 13-வது அமர்வு மற்றும் மாநிலங்களவையின் 261- வது அமர்வு) செப்டம்பர் 18 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை 5 அமர்வுகளாக நடைபெறும்.
Advertisement
Advertisement
இதையும் படிக்க | ட்விட்டரில் விரைவில் ஆடியோ, விடியோ கால் வசதி!
நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவைக் கொண்டாடும் வேளையில், நாடாளுமன்றத்தில் பயனுள்ள விவாதங்கள் நடப்பதை எதிர்நோக்குகிறோம்' என்று குறிப்பிட்டுள்ளார்.
சிறப்பு கூட்டத்தொடர் அறிவிக்கப்பட்டுள்ளதால் முக்கிய மசோதாக்கள் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மழைக்கால கூட்டத்தொடரில் மணிப்பூர் பிரச்னையை முன்வைத்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் பெரும்பாலான நாள்கள் இரு அவைகளும் முடங்கியது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.