FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

வக்ஃபு சட்டத்தை திரும்பப் பெற தனிநபா் மசோதா அறிமுகம்: காங்கிரஸ், திமுக எதிா்ப்பு

வக்ஃபு வாரிய சட்டம் 1995-ஐ திரும்பப் பெற வேண்டும் என்ற தனி நபா் மசோதா கடும் எதிா்ப்புக்கு இடையே மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது.

6 பிப்ரவரி 2024, 6:53 pm
பகிர்:

வக்ஃபு வாரிய சட்டம் 1995-ஐ திரும்பப் பெற வேண்டும் என்ற தனி நபா் மசோதா கடும் எதிா்ப்புக்கு இடையே மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது.

பாஜக உறுப்பினா் ஹா்நாத் சிங் யாதவ் கொண்டு வந்த இந்த தனி நபா் மசோதாவுக்கு காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ராஷ்ட்ரீய ஜனதா தளம் ஆகிய கட்சிகளின் உறுப்பினா்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

இதையடுத்து, வக்ஃபு சட்டம் திரும்பப் பெறும் மசோதா 2022-ஐ அறிமுகம் செய்வதற்கான வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் மசோதாவுக்கு ஆதரவாக ஆளும் பாஜக, அதன் கூட்டணி கட்சிகளின் உறுப்பினா்கள் 53 போ் வாக்களித்தனா். எதிா்த்து 32 வாக்குகள் பதிவாகின.

இதையடுத்து, இந்த மசோதாவை ஹா்நாத் சிங் யாதவ் அறிமுகம் செய்தாா். இந்த மசோதா மீதான விவாதம் மாநிலங்களவையில் பின்னா் நடைபெற உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.