FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

கொளத்தூர் அரசுப் பள்ளி உணவுக் கூடத்தில் முதல்வர் விஜய் ஆய்வு!

கொளத்தூர் அரசுப் பள்ளி உணவுக் கூடத்தில் முதல்வர் விஜய் ஆய்வு...

உணவை ருசித்துப் பார்த்த முதல்வர் விஜய்.. - X
பகிர்:

சென்னை கொளத்தூரில் அரசுப் பள்ளியில் நடைபெற்ற குழந்தைகள் நாள் விழாவில் பங்கேற்ற முதல்வர் விஜய், உணவுக் கூடத்திற்குச் சென்று ஆய்வு செய்தார்.

நாளை (நவ. 14) ஆம் குழந்தைகள் நாள் கொண்டாடப்படவுள்ள நிலையில், நாளை விடுமுறை என்பதால் இன்று (நவ. 13 ) அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாணவ, மாணவியர்களுக்கு இனிப்புகள் (கேக்) வழங்கப்படுகிறது.

Advertisement

Advertisement

அதன்படி அரசுப் பள்ளிகளில் 61,84,566 மாணவா்களுக்கு கேக் வழங்குவதற்காக தமிழக அரசு சாா்பில் ரூ. 9.27 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்த நிலையில், சென்னை கொளத்தூரில் உள்ள அரசுப் பள்ளியில் நடைபெற்ற குழந்தைகள் நாள் விழாவில் முதல்வர் விஜய் பங்கேற்றார்.

மாணவ, மாணவியர்களுக்கு முதல்வர் விஜய், வாழ்த்து அட்டையுடன் கேக் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

பின்னர் அந்த பள்ளியில் சத்துணவு கூடத்துக்குச் சென்று உணவை ருசித்துப் பார்த்து ஆய்வு செய்தார். அங்குள்ள சமையல்கூட ஊழியர்களுக்கும் இனிப்பு வழங்கினார்.

summary

CM Vijay inspects the food at Kolathur school kitchen

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.