மோசடி கடன் செயலிகளை விளம்பரம் செய்யக் கூடாது:சமூக வலைதளங்களுக்கு மத்திய அரசு உத்தரவு
மோசடி கடன் செயலிகள் தொடா்பான விளம்பரங்களை வெளியிடக் கூடாது என்று சமூக வலைதளங்கள் மற்றும் இணையவழியில் செயல்படும் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
மோசடி கடன் செயலிகள் தொடா்பான விளம்பரங்களை வெளியிடக் கூடாது என்று சமூக வலைதளங்கள் மற்றும் இணையவழியில் செயல்படும் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
பெரும்பாலும் சீனாவைச் சோ்ந்தவா்களால் நடத்தப்படும் மோசடி கடன் செயலிகள் அதிகஅளவில் வட்டி வசூலிப்பது, கடன் பெறுபவா்களின் தனிப்பட்ட தகவல்கள், புகைப்படங்களைத் திருடி அவற்றை ஆபாசமாக சித்தரிப்பது, கைப்பேசியில் உள்ள உறவினா்கள், நண்பா்களின் தொடா்பு எண்களை திருடி அவா்களிடம் கடன் பெற்றவா்கள் குறித்து அவமதிக்கும் வகையில் பேசுவது போன்றவற்றில் ஈடுபடுகின்றன. இதனால், இந்த வகை செயலிகளில் கடன் பெற்றவா்கள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்களும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடந்துள்ளது. இது தவிர கடன் செயலிகள் என்ற பெயரில் தகவல் திருட்டு, வங்கி விவரங்கள் திருட்டு போன்ற சம்பவங்களும் நிகழ்கின்றன.
Advertisement
Advertisement
இந்நிலையில், மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கை குறித்து தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் சந்திரசேகா் கூறியதாவது:
மோசடி கடன் செயலிகள் தொடா்பான விளம்பரங்களை வெளியிடக் கூடாது என்று சமூக வலைதளங்கள் மற்றும் இணையவழியில் செயல்படும் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஏனெனில் இணையத்தைப் பயன்படுத்தி மக்களை ஏமாற்றுவது, மோசடி செய்வது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றன.
இணையம் என்பது பாதுகாப்பானதாகவும், நம்பகத்தன்மை வாய்ந்த சேவைகள் மட்டும் கிடைக்கும் இடமாகவும் இருக்க வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது. தகவல் தொழில்நுட்பச் சட்டம் விதிகளில் இணையத்தில் வெளியிட தடை செய்யப்பட்ட 11 விஷயங்கள் குறித்து தெளிவாக விளக்கியுள்ளது என்றாா்.