FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

சன்னி லியோன் பேஷன் நிகழ்ச்சி நடைபெறும் இடம் அருகே குண்டுவெடிப்பு

இம்பாலில் பாலிவுட் நடிகை சன்னி லியோனின் பேஷன் நிகழ்ச்சி நடைபெறவிருந்த இடத்திற்கு அருகே குண்டு வெடித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Updated On : 4 பிப்ரவரி 2023, 6:14 pm IST
கோப்புப் படம்.
பகிர்:

இம்பாலில் பாலிவுட் நடிகை சன்னி லியோனின் பேஷன் நிகழ்ச்சி நடைபெறவிருந்த இடத்திற்கு அருகே குண்டு வெடித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மணிப்பூர் மாநிலம், இம்பாலில் தனியார் நிறுவனம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை பேஷன் நிகழ்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதில் சிறப்பு விருந்தினராக பாலிவுட் நடிகை சன்னி லியோன் பங்கேற்க உள்ளார். இந்த நிலையில் சன்னி லியோன் பங்கேற்கவிருந்த பேஷன் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு அருகே இன்று காலை 6 மணியளவில் கையெறி குண்டு வெடித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இருப்பினும், இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என்று மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. இந்த குண்டு வெடிப்பு கிளர்ச்சியாளர்களின் சதிவேலையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. மணிப்பூரில் 40க்கும் மேற்பட்ட கிளர்ச்சிக் குழுக்கள் உள்ளன.

இம்பால் பள்ளத்தாக்கு சார்ந்த குழுக்கள் இந்தி திரைப்படங்கள் மற்றும் பாடல்களை எதிர்க்கின்றன. இம்பாலில் இயங்கும் இரண்டு மூன்று திரையரங்குகளில் ஆங்கிலம், கொரியன் மற்றும் மணிப்பூரி திரைப்படங்கள் மட்டுமே திரையிடப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments