FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

உத்தரகண்டில் ரூ.16 கோடியில் கட்டிய பாலம் அடித்துச் செல்லப்பட்ட பரிதாபம்!

உத்தரகண்டில் ரூ.16 கோடியில் கட்டிய பாலம் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பரிதாபம்!

Updated On : 28 ஜூலை 2026, 6:34 pm IST
புதிய பாலம் - Ians
பகிர்:

உத்தரகண்ட் மாநிலத்தில், ரூ.16 கோடியில் கட்டப்பட்டு, இரண்டு வாரங்களுக்கு முன்பு திறக்கப்பட்ட புத்தம் புதிய பாலத்தின் அணுகு சாலை, கன மழையில் அடித்துச் செல்லப்பட்டதைப் பார்த்து மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

நல்லவேளை, இரண்டு வாரங்களுக்கு முன்பு, திறக்கப்பட்டு மக்கள் பயன்படுத்திப் பார்த்துவிட்டனர். திறக்கப்படாமல் இருந்திருந்தால், புதிய சாலை அடித்துச் செல்லப்பட்டுவிட்டதே என்று அப்பகுதி மக்கள் கண்ணீர் விட்டு அழுதிருப்பார்கள் என்று ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.

உத்தரகண்டில், ஒரு சில நாள்களுக்கு முன்பு கனமழை பெய்து பெரும்பாலான இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதில், டோன்ஸ் ஆற்றின் மீது கட்டப்பட்ட புதிய பாலத்துக்கான அணுகு சாலையின் ஒரு பகுதியே மழையில் அடித்துச் செல்லப்பட்டிருக்கிறது.

Advertisement

Advertisement

டேராஹ்டூன் - பவோன்டா சாஹிப் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு இங்கு இருந்த பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு புதிதாகக் கட்டப்பட்ட பாலம் ஜூலை 12ஆம் தேதிதான் இந்த பாலம் திறக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்துக்கான அணுகு சாலை மட்டுமே வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டிருக்கிறது பாலம் இல்லை என்று அரசு சார்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

உடனடியாக சாலையை சீரமைக்கும் பணிகளும் தொடங்கியிருக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments