கால்பந்தில் ‘கால்தடம் பதிக்கும்’ நடிகர் டைகர் ஷெராஃப்!
மும்பை எஃப்சி அணி முதன்முறையாக பங்கேற்கும் துராந்த் கோப்பை கால்பந்துத் தொடரில் விளையாட நடிகர் டைகர் ஷெராஃப் ஒப்பந்தம்.
மும்பை எஃப்சி அணி முதன்முறையாக பங்கேற்கும் துராந்த் கோப்பை கால்பந்துத் தொடரில் விளையாட நடிகர் டைகர் ஷெராஃப் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
ஆசியாவின் மிகவும் பழமை வாய்ந்த கால்பந்து தொடரான துராந்த் கோப்பை தற்போது நடைபெற்று வருகிறது. 1888 ஆம் ஆண்டில் சர் மார்டிமர் துராந்த் என்பவரால் தொடங்கப்பட்ட இந்தத் தொடரின் 135-வது தொடர் நாடு முழுவதுமுள்ள 5 நகர்களில் நடைபெற்று வருகிறது.
இதில் 24 அணிகள், ஆறு குழுக்களாகப் பங்கேற்றுள்ளன. இந்தப் போட்டிகள் ஜூலை 25 தொடங்கிய நிலையில், ஆக. 23 வரை நடைபெறுகிறது. இந்த நிலையில், பாலிவுட் நடிகரான டைகர் ஷெராஃப், மும்பை எஃப்சி அணியின் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
Advertisement
Advertisement
மும்பை எஃப்சி அணிக்கான பயிற்சி ஆட்டங்களில் டைகர் ஷெராஃப் தொடர்ந்து விளையாடி வருகிறார். 135-வது துராந்த் கால்பந்து கோப்பைத் தொடரின் குழுப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் அவர் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
குழுப் போட்டிகளுக்கான கடைசி ஆட்டம் வருகிற ஜூலை 30 ஆம் தேதி மேகாலயத்தின் ஷில்லாங்கில் நடைபெறவிருக்கிறது.
ஆக. 3 அன்று லாங்ஸ்னிங் எஸ்சி அணிக்கு எதிராக தொடரைத் தொடங்கும் மும்பை எஃப்சி அணி, அதைத் தொடர்ந்து ஆக. 8 அன்று ஷில்லாங் லஜோங் அணியையும், ஆக. 11 ஆம் தேதி நோங்க்சே எஸ்எஸ் மற்றும் சிசி அணியையும் எதிர்கொள்கிறது.
Tiger Shroff is set to trade the silver screen for the football pitch, with the Bollywood actor named in Mumbay FC's squad for the Durand Cup and potentially in line to make his professional debut in the tournament.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.