சீரடி சென்ற பேருந்து விபத்து: 10 பேர் பலி; மேலும் பலர் காயம்
சீரடி சென்ற பேருந்து ஒன்று லாரி மோதி விபத்துக்குள்ளானதில் 10 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சீரடி சென்ற பேருந்து ஒன்று லாரி மோதி விபத்துக்குள்ளானதில் 10 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் நாசிக் - சீரடி நெடுஞ்சாலையில் பதாரே என்ற இடத்தில் சீரடி சென்றுகொண்டிருந்த பேருந்து லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் பேருந்தில் இருந்த பக்தர்கள் 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Advertisement
Advertisement
விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
இதையும் படிக்க | பயனர் பெயர்களை விற்கத் திட்டமிடும் டிவிட்டர்!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.