2020-க்கு பிறகு 50-க்கும் கீழ் குறைந்த ஒருநாள் கரோனா பாதிப்பு!
நாட்டில் கடந்த 2020-க்கு பிறகு ஒரு நாள் கரோனா பாதிப்பு 50-க்கும் கீழ் குறைந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
நாட்டில் கடந்த 2020-க்கு பிறகு ஒரு நாள் கரோனா பாதிப்பு 50-க்கும் கீழ் குறைந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
கரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.
அதன்படி, நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 36 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை (4,49,93,579) கோடியாக உயர்ந்துள்ளது.
Advertisement
Advertisement
கடந்த 24 மணி நேரத்தில் புதிய இறப்புகள் எதுவும் பதிவாகவில்லை. இதையடுத்து இதுவரை பலியானோர் எண்ணிக்கை 5,31,893 ஆக உள்ளது. கரோனா சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 1,844 ஆகப் பதிவாகியுள்ளது.
இதுவரை மொத்தம் 4,44,59,838 பேர் நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். குணமடைந்தோர் விகிதம் 98.81 சதவீதமாக உள்ளது.
நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை 220.66 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.