FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

குடிநீர் குழாய் வெடித்ததால் சாலையில் விரிசல்: ஸ்கூட்டரில் சென்ற பெண் படுகாயம்!

மகாராஷ்டிரம்  மாநிலம் யவத்மால் மாவட்டத்தில் நிலத்தடியில் சென்ற குடிநீர் குழாய் வெடித்து உடைந்ததால் சாலையில் பெரிய அளவில் விரிசல் ஏற்பட்டு, சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

Updated On : 8 மார்ச் 2023, 11:33 am IST
பகிர்:


மும்பை: மகாராஷ்டிரம்  மாநிலம் யவத்மால் மாவட்டத்தில் நிலத்தடியில் சென்ற குடிநீர் குழாய் வெடித்து உடைந்ததால் சாலையில் பெரிய அளவில் விரிசல் ஏற்பட்டு, சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் படுகாயம் அடைந்துள்ளார். 

மகாராஷ்டிரம் யவத்மால் மாவட்டம் விதர்பா ஹவுசிங் சொசைட்டி அருகே சனிக்கிழமை நிலத்தடியில் சென்ற குடிநீர் குழாய் வெடித்து உடைந்ததால் தண்ணீர் பீய்ச்சி அடித்து வெளியேறிய போது ஏற்பட்ட அதிர்வால் சாலையிலும் விரிசல் ஏற்பட்டது. அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் ஒருவர் அதிகளவு தண்ணீரில் சிக்கிக் கொண்டு படுகாயம் அடைந்துள்ளார். இந்த காட்சிகள் அங்கிருந்த சி.சி.டி.சி. கேமராவில் பதிவாகியுள்ளது. 

அந்த விடியோவில் குடிநீர் குழாய் வெடித்து உடைந்ததால் தண்ணீர் பீய்ச்சியடிப்பதும், அப்போது பழுப்பு நிற தண்ணீர் அலையின் கீழ் இளஞ்சிவப்பு நிற ஆடை அணிந்த பெண் ஸ்கூட்டர் ஓட்டி வரும்போது சிக்கிக் கொள்வதும், அந்த பெண் தண்ணீர் அலையில் அடிபட்டு படுகாயமடைந்திருப்பது பதிவாகி உள்ளது. 

Advertisement

Advertisement

மேலும், சாலையில் பெரிய விரிசல் ஏற்பட்ட காட்சிகளும் அதில் உள்ளன. குடிநீர் குழாயில் இருந்து வெளிவந்த தண்ணீர் அங்கிருந்த ஒரு பள்ளம் முழுவதும் நிரம்பி வெளியேறியது. மேலும் சாலை முழுவதும் கற்களும் சிதறி கிடந்தன.

இந்த விடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த ஜனவரி மாதம் பெங்களூருவின் இட்டமடு மெயின் ரோட்டின் அருகில் ஸ்மார்ட் சிட்டி கட்டப்பட்டு வரும் பகுதி சாலை குழி விழுந்து சாலை சிதிலமடைந்ததில் அந்த பகுதியில் சைக்கிளில் வந்துகொண்டிடிருந்த ஒருவர் காயமடைந்தார்.

2020 இல், மேற்கு உத்தரப்பிரதேசத்தின் பரேலியில் இதேபோன்ற சம்பவம் நடந்துள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments