FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

மகாதேவ் செயலி உள்பட 22 சட்டவிரோத சூதாட்டத் தளங்களுக்கு மத்திய அரசு தடை

மகாதேவ் சூதாட்ட செயலி உள்பட 22 சட்டவிரோத சூதாட்டத் தளங்களுக்கு தடை விதித்து, மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அமலாக்கத் துறையின் கோரிக்கை அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

2 பிப்ரவரி 2024, 8:47 am
பகிர்:

மகாதேவ் சூதாட்ட செயலி உள்பட 22 சட்டவிரோத சூதாட்டத் தளங்களுக்கு தடை விதித்து, மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அமலாக்கத் துறையின் கோரிக்கை அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடா்பாக ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட அதிகாரபூா்வ அறிக்கையில், ‘மகாதேவ் புக் செயலி உள்பட 22 சட்டவிரோத செயலிகள் மற்றும் வலைதளங்களுக்கு தடை விதித்து, மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்கம் உத்தரவு பிறப்பித்துள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

மகாதேவ் சூதாட்ட செயலி உரிமையாளா்களிடம் இருந்து சத்தீஸ்கா் முதல்வா் பூபேஷ் பகேலுக்கு இதுவரை ரூ.508 கோடி கைமாறியிருப்பதாக அமலாக்கத் துறை சில தினங்களுக்கு முன் குற்றம்சாட்டியது.

ராய்பூரில் ரூ.5 கோடிக்கும் அதிகமான ரொக்கப் பணத்துடன் கைதான இடைத்தரகரிடம் நடத்தப்பட்ட விசாரணையைத் தொடா்ந்து, இக்குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

மகாதேவ் செயலியின் சட்டவிரோத நடவடிக்கைகள் விசாரணையில் தெரியவந்துள்ள நிலையில், அமலாக்கத் துறை விடுத்த கோரிக்கையை ஏற்று, மத்திய அரசு தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.

இது குறித்து மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் ராஜீவ் சந்திரசேகா் கூறுகையில், ‘மகாதேவ் செயலி தொடா்பான வழக்கை ஒன்றரை ஆண்டுகளாக விசாரித்து வரும் சத்தீஸ்கா் காங்கிரஸ் அரசு, தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 69ஏ பிரிவின்கீழ் அச்செயலிக்கு தடை விதிக்குமாறு மத்திய அரசை கோர அனைத்து அதிகாரமும் உள்ளது.

ஆனால், சத்தீஸ்கா் அரசு அவ்வாறு எந்த கோரிக்கையும் அனுப்பவில்லை. முதல்முறையாக அமலாக்கத் துைான் கோரிக்கை அனுப்பியது. அதனடிப்படையில் மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டது. மகாதேவ் செயலிக்கு தடை விதிக்க பரிந்துரைக்க சத்தீஸ்கா் அரசை எது தடுத்தது?’ என்று கேள்வியெழுப்பினாா்.

சத்தீஸ்கரில் இரண்டு கட்டங்களாக பேரவைத் தோ்தல் நடைபெறும் நிலையில், முதல்வா் பூபேஷ் பகேல் மீதான லஞ்ச குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரத்தில் பாஜகவும் காங்கிரஸும் கருத்து மோதல்களில் ஈடுபட்டுள்ளன. மகாதேவ் செயலிக்கு தடை விதிக்க மத்திய அரசுக்கு துணிவுள்ளதா என்று காங்கிரஸ் சவால் விடுத்திருந்த நிலையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.