முகப்பு
இந்தியா

உத்தரப் பிரதேசம்: நின்று கொண்டிருந்த வேன் மீது கார் மோதியதில் 6 பேர் பலி

உத்தரப் பிரதேசத்தின் முசாபர் நகரில் நின்று கொண்டிருந்த வேன் மீது கார் மோதிய விபத்தில் ஆறு பேர் உயிரிழந்தனர். 

Updated On : 14 நவம்பர் 2023, 5:56 pm IST
கோப்புப்படம்
பகிர்:

உத்தரப் பிரதேசத்தின் முசாபர் நகரில் நின்று கொண்டிருந்த வேன் மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.

செவ்வாய்க்கிழமை ராம்பூர் திராஹா அருகே தேசிய நெடுஞ்சாலை 58-இல் நின்று கொண்டிருந்த வேன் மீது கார் மோதியதில் தில்லியைச் சேர்ந்த ஆறு பேர் உயிரிழந்தனர். 

தில்லியின் ஷாதரா பகுதியைச் சேர்ந்த சிவம், குணால், தீரஜ், விஷால் உள்ளிட்ட ஆறு பேரும் ஹரித்வாருக்கு காரில் சென்றபோது இந்த விபத்து நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

Advertisement

இதுகுறித்து காவல்துறை அதிகாரி வினய் கௌதம் கூறுகையில், “விபத்து குறித்து எங்களுக்கு தகவல் வந்ததன் அடிப்படையில் உடனடியாக அங்கு சென்றோம். ஆனால் ஆறுபேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டனர். அதைத் தொடர்ந்து அவர்களின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்து விட்டு, உடல்களை உடற்கூறாய்வுக்கு அனுப்பினோம். விரைந்து அப்பகுதியில் போக்குவரத்தை சீரமைத்தோம்” என்று கூறினார். 

சாலை விபத்தில் உயிரிழந்தவர்கள் குறித்து உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் அலுவலகம் வெளியிட்ட இரங்கல் குறிப்பில், “விபத்தில் உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன். அவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள். விபத்தில் காயமடைந்தவர்களை உரிய கவனம் அளித்து சிகிச்சை வழங்குமாறு அறிவுறுத்தியுள்ளேன்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments