FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

வளர்மதி மறைவு: முதல்வர் இரங்கல்

இஸ்ரோ விண்ணில் ராக்கெட்களை ஏவும்போது அவை குறித்த தகவல்களை வர்ணனை செய்து வந்த வளர்மதி மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். 

6 பிப்ரவரி 2024, 6:41 pm IST
முதல்வர் மு.க.ஸ்டாலின் (கோப்புப் படம்)
பகிர்:

இஸ்ரோ விண்ணில் ராக்கெட்களை ஏவும்போது அவை குறித்த தகவல்களை வர்ணனை செய்து வந்த வளர்மதி மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள மு.க. ஸ்டாலின், இஸ்ரோ விண்ணில் ராக்கெட்டுகலை ஏவும்போது அவை குறித்த தகவல்களை வர்ணனை செய்து வந்த மிஷன் ரேஞ்ச் ஸ்பீக்கர் வளர்மதி மறைந்த செய்தி அறிந்து வருந்துகிறேன். 

மிகவும் சவாலான ஒரு பணியைத் திறம்படக் கையாண்டு, இஸ்ரோவின் முக்கியத் திட்டப் பணிகளுடைய வெற்றித் தருணங்களின் குரலாக ஒலித்த வளர்மதி மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும் அவரின் பணியிடத் தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்களையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments