மணிப்பூரில் மீண்டும் வன்முறை: மூவர் சுட்டுக் கொலை!
மணிப்பூரின் காங்போக்பி மாவட்டத்தில் இன்று(செப்.12) காலை நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
மணிப்பூரின் காங்போக்பி மாவட்டத்தில் இன்று(செப்.12) காலை நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
கடந்த மே மாதம் முதல் மணிப்பூர் மாநிலத்தில் கலவரம் நீடித்து வருகிறது. பழங்குடி அந்தஸ்து வழங்கக்கோரி மைதேயி சமூகத்தினர் வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு கூகி பழங்குடியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் கூகி பழங்குடியைச் சேர்ந்த இரண்டு பெண்கள் ஆடைகளின்றி ஊர்வலமாக அழைத்துவரப்பட்ட சம்பவமும் பெரும் கலவரம் வெடித்தது.
இந்த நிலையில், வன்முறை சற்று தணிந்த நிலையில், தற்போது மீண்டும் புதிய கலவரம் நிகழ்ந்து வருகின்றது. அதன்படி, கங்குய் பகுதியில் உள்ள இரெங் மற்றும் கரம் வைபேய் கிராமங்களுக்கு இடையே நேற்று மீண்டும் வன்முறை வெடித்தது. இதில் அடையாளம் தெரியாத நபர்கள் பொதுமக்கள் மூவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். இந்த சம்பவம் காலை 8.20-க்கு நிகழ்ந்துள்ளது.
Advertisement
Advertisement
செப்டம்பர் 8 அன்று தெங்னௌபல் மாவட்டத்தில் உள்ள பல்லேல் என்ற இடத்தில் மூவர் கொல்லப்பட்டனர். 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த நிலையில் இன்று மீண்டும் வன்முறை தொடர்ந்துள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.