போலியான வங்கி செயலி மற்றும் பங்குச் சந்தை செயலிகள்: எச்சரிக்கும் அரசு
போலியான வங்கி செயலி மற்றும் பங்குச் சந்தை செயலிகள் குறித்து மத்திய அரசு எச்சரிக்கை
கடந்த ஆண்டு, பாரத ஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்கள் எஸ்எம்எஸ் மோசடி குறித்து விழிப்போடு இருக்குமாறு அரசு எச்சரித்திருந்தது.
உங்கள் பான் எண்ணை சமர்ப்பிக்குமாறு குறுந்தகவல் மூலம் எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு மோசடியாளர்கள் தகவல்அனுப்பு மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த நிலையில், தற்போது, போலியான வங்கி செயலிகள் மற்றும் பங்குச் சந்தை செயலிகள் மூலம், பயனாளர்களின் வங்கிக் கணக்கிலிருந்து பணமோசடி நடப்பதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது.
Advertisement
Advertisement
சைபர் டோஸ்ட், சைபர் சேஃப்டி, சைபர் செக்யூரிட்டி போன்ற மத்திய அரசின் கீழ் வரும் அதிகாரப்பூர்வ பக்கங்களில், புழக்கத்தில் இருக்கும் போலியான செயலிகள் பெயர்கள் பட்டியலிடப்பட்டு, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
யூனியன் வங்கியின் போலியான செயலிகள் புழக்கத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுளள்து. அதற்கு யூனியன்-ரிவார்ட்ஸ்.ஏபிகே என்ற செயலியின் பெயரும் பகிரப்பட்டுள்ளது.
எனவே, போலியான செயலிகள் மீது மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.