போலி புகைப்படங்களைப் பகிர்ந்து மகிழ வேண்டாம்: தமன்னா
நடிகை தமன்னாவின் பேச்சு குறித்து...
நடிகை தமன்னா போலியான புகைப்படங்களால் மகிழ்ச்சியடையாதீர்கள் எனக் கூறியுள்ளார்.
’மில்க் ப்யூட்டி’ என ரசிகர்களால் அழைக்கபடும் தமன்னாவுக்கு இந்தியளவில் ரசிகர்கள் உண்டு. தமிழ், தெலுங்கில் கலக்கியவர் தற்போது ஹிந்தித் திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். மேலும், இவரது நடனத்துக்கு ரசிகர்கள் ஏராளம். திரைப்படங்களில் அவரது சிறப்பு நடனக் காட்சிகள் யூடியூப்பில் கோடிக்கணக்கான பார்வைகளைப் பெறுகின்றன.
குறிப்பாக ஆஜ் கி ராட், காவாலா, நஷா உள்ளிட்ட பாடல்களில் தமன்னா நடனம் அதிகம் வைரலாகின. கடைசியாக நடிகை தமன்னா நடிப்பில் ஒடேலா 2 வெளியானது. தற்போது, இவர் மூன்று ஹிந்தி திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், நிகழ்ச்சியில் பேசிய தமன்னா, “ஒரு நடிகையாக ரசிகர்களை மகிழ்விப்பதுதான் எனக்குள்ள பொறுப்பாக பார்க்கிறேன். அப்படி, மகிழ்விப்பவர்களை நீங்கள் கொண்டாடுங்கள். விமர்சிக்காதீர்கள். மேலும், தவறான தகவல்களையும் போலி புகைப்படங்களையும் பகிர்ந்து அதில் மகிழ்ச்சியடையாதீர்கள்” என்று கூறியுள்ளார்.
Actress Tamannaah has advised people not to be misled by fake photos.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.