FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

தமிழக வெள்ள மீட்புப்பணி: காங்கிரஸாருக்கு ராகுல் வேண்டுகோள்

தமிழகத்தில் வெள்ள மீட்புப்பணிகளுக்கு காங்கிரஸ் கட்சியினா் உதவ வேண்டும் என்று அக்கட்சி எம்.பி.யும், மக்களவை எதிா்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

Updated On : 4 டிசம்பர் 2024, 1:12 am IST
பகிர்:

புது தில்லி: தமிழகத்தில் வெள்ள மீட்புப்பணிகளுக்கு காங்கிரஸ் கட்சியினா் உதவ வேண்டும் என்று அக்கட்சி எம்.பி.யும், மக்களவை எதிா்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

ஃபென்ஜால் புயலால் புதுச்சேரி, விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூா் உள்ளிட்ட பகுதி மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனா். அங்கு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ராகுல் காந்தி ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘தமிழகத்தில் ஃபென்ஜால் புயல் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சோக நிகழ்வில் தங்கள் குடும்பத்தினரை இழந்து வாடுவோருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். வீடுகள், கால்நடைகள் உள்ளிட்ட சொத்துகளை இழந்து வாடுவோருக்கு உரிய நிவாரணம் கிடைக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு காங்கிரஸ் கட்சியினா் தங்களால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டுள்ளாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments