FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

ஆன்லைன் செயலி மூலம் மருந்துகள் விநியோகம் செய்ய திமுக எம்.பி. எதிர்ப்பு

"ஸ்விகி' உள்ளிட்ட உணவு விநியோக நிறுவனங்கள் மருந்துகள் விற்கும் செயல்பாடுகளை உடனடியாக மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும்

Updated On : 5 டிசம்பர் 2024, 3:04 am IST
பகிர்:

நமது நிருபர்

"ஸ்விகி' உள்ளிட்ட உணவு விநியோக நிறுவனங்கள் மருந்துகள் விற்கும் செயல்பாடுகளை உடனடியாக மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று மாநிலங்களவையில் திமுக உறுப்பினரும் மருத்துவருமான கனிமொழி என்விஎன் சோமு புதன்கிழமை வலியுறுத்தினார்.

இது தொடர்பாக அவர் மேலும் பேசியதாவது:

Advertisement

Advertisement

ஸ்விகி மற்றும் வீடுகளுக்கு டெலிவரி சேவை வழங்கும் பிற நிறுவனங்கள் மருந்துகளை விற்பனை செய்வது துரதிருஷ்டவசமானது மற்றும் கவலை அளிக்கிறது. உணவு விநியோக நிறுவனத்தால் 10 நிமிஷங்களில் மருந்து விநியோகம் செய்வது மருத்துவ மற்றும் மருந்தக வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்துகிறது.

ஆன்லைன் விற்பனை கடைகள் மூலம் நிமிஷங்களுக்குள் மருந்துகளை டெலிவரி செய்வதை இலக்காகக் கொண்டுள்ள ஸ்விகியின் மளிகைப் பிரிவான இன்ஸ்டாமார்ட், மின்னணு மருந்தகங்களின் பெருநிறுவனமான இ-ஃபார்மஸி, ஃபார்மா ஈசி ஆகியவற்றுக்கு இடையேயான சாத்தியம் மிக்க ஒத்துழைப்பு குறித்து அகில இந்திய மருந்தக மற்றும் மருந்து தயாரிப்பு நிபுணர்கள் அமைப்பு (ஏஐஓசிடி) தீவிர கவலைகளை வெளிப்படுத்தியுள்ளது.

இது ஓர் ஆபத்தான மாதிரி மட்டுமின்றி நோயாளியின் பாதுகாப்புக்கு முக்கியமான அத்தியாவசிய ஒழுங்குமுறை சோதனை முறைகளை மீறும் செயல்பாடாகலாம். இந்தியாவில் மருந்துகளின் விநியோகம் என்பது, மருத்துவரின் மருந்துகள் பரிந்துரை சீட்டு, நோயாளிகளை அடையாளம் காணுதல், நுகர்வோருக்கு தீங்கு விளைவிக்காத நடைமுறையை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட கடுமையான நெறிகளுக்கு உள்பட்டது.

இந்தப் பாதுகாப்பு அம்சங்களுடன் துரித டெலிவரி காலக்கெடுவின்கீழ் இயங்கும் நிறுவனங்களின் சேவை சமரசம் செய்யக்கூடும் அச்சம் உள்ளது.

துரித டெலிவரி மாடலில், காலாவதி அல்லது போலி மருந்துகளின் புழக்கம் அதிகரிக்கலாம், இது நோயாளியின் பாதுகாப்புக்கு தீங்கு விளைவிக்கும். தேவையான தரநிலைகளை பின்பற்றுவது இயலாமல் போகும்.

எனவே, ஆன்லைன் டெலிவரி நிறுவனங்கள் மூலம் 10 நிமிங்களில் மருந்துகளை விநியோகிக்கப்படும் ஆபத்தை தடுக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இனியும் மக்களின் வாழ்க்கையுடன் விளையாட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றார் கனிமொழி என்விஎன் சோமு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments