முகப்பு
இந்தியா

எதிர்க்கட்சிகளின் அமளியால் முடங்கிய நாடாளுமன்றம்! இரு அவைகளும் ஒத்திவைப்பு!

அதானி விவகாரத்தை விவாதிக்க கோரி இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் அமளி..

Updated On : 10 டிசம்பர் 2024, 11:50 am IST
எதிர்க்கட்சிகள் அமளி - PTI
பகிர்:

எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதை தொடர்ந்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

நாடாளுமன்ற குளிா்கால கூட்டத் தொடா் தொடங்கியது முதல், தொழிலதிபா் கெளதம் அதானி மீதான அமெரிக்க நீதித் துறையின் லஞ்ச குற்றச்சாட்டு, மணிப்பூர் போராட்டம், உத்தர பிரதேசத்தின் சம்பல் பகுதியில் மசூதி ஆய்வின்போது ஏற்பட்ட வன்முறை ஆகிய விவகாரங்களை எதிா்க்கட்சிகள் எழுப்பி வருகின்றன. இவ்விரு விவகாரங்கள் குறித்து உடனடியாக விவாதம் கோரி, எதிா்க்கட்சி உறுப்பினா்கள் தொடா்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்த நிலையில், மூன்றாவது வாரத்தின் முதல் நாளான இன்று காலை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அலுவல்களை ஒத்திவைத்துவிட்டு அதானி உள்ளிட்ட விவகாரங்களை விவாதிக்க எதிர்க்கட்சி எம்பிக்கள் நோட்டீஸ் அளித்தனர்.

Advertisement

Advertisement

ஆனால் எதிர்க்கட்சி எம்பிக்களின் நோட்டீஸ்களை ஏற்க அவைகளின் தலைவர்கள் மறுத்துவிட்டனர். இதனால், எதிர்க்கட்சி எம்பிக்கள் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து பகல் 12 மணிவரை இரு அவைகளையும் ஒத்திவைத்து அவைத் தலைவர்கள் உத்தரவிட்டனர்.

தொடர்ந்து, நாடாளுமன்ற வளாகத்தில் அதானி விவகாரத்தை விசாரிக்கக் கோரியும், கூட்டுக் குழு அமைக்கக் கோரியும் எதிர்க்கட்சி எம்பிக்கள் முழக்கமிட்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments