FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

2-ம் நாளாக நாடாளுமன்ற இரு அவைகளும் தொடங்கியவுடன் ஒத்திவைப்பு!

எதிர்க்கட்சிகள் அமளி காரணமாக மக்களவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது பற்றி....

Updated On : 21 ஜூலை 2026, 11:19 am IST
மக்களவை.... (கோப்புப் படம்) - IANS
பகிர்:

தில்லியில் போராட்டம் நடத்திய இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன.

பரபரப்பான அரசியல் சூழலில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் நேற்று (ஜூலை 20) தொடங்கியது.

நேற்று தில்லி ஜந்தர் மந்தரில் இருந்து நாடாளுமன்றத்தை நோக்கி கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்திய நிலையில் அவர்கள் மீது தில்லி காவல்துறையினர் தாக்குதல் நடத்தினர். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இந்த விவகாரம் குறித்து அவையில் விவாதிக்க வேண்டும் என பல்வேறு எம்.பி.க்கள் ஒத்திவைப்பு நோட்டீஸ் வழங்கினர்.

Advertisement

Advertisement

இந்நிலையில் இன்று 2-ம் நாளாக நாடாளுமன்றம் கூடிய நிலையில் தில்லியில் இளைஞர்கள் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் இரு அவைகளிலும் முழக்கமிட்டனர்.

இதையடுத்து அவை தொடங்கிய சில நிமிடங்களில் இரு அவைகளுமே பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

நேற்றும் அயோத்தி ராமர் கோயில் நன்கொடை திருட்டு, மேக்கேதாட்டு அணை, நீட் வினாத்தாள் கசிவு, எத்தனால் பெட்ரோல் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டதனால் அவை முடங்கியது குறிப்பிடத்தக்கது.

summary

Both Houses of Parliament adjourned immediately after convening for the second day

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments