மாநிலங்களவைத் தலைவரை சந்தித்த பிரதமர் மோடி!
குடியரசு துணைத் தலைவரும் மாநிலங்களவைத் தலைவருமான ஜகதீப் தன்கரை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தார்.
குடியரசு துணைத் தலைவரும் மாநிலங்களவைத் தலைவருமான ஜகதீப் தன்கரை பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜூலை 3) சந்தித்தார்.
மாநிலங்களவைக் கூட்டம் முடிந்த பின்னர் நாடாளுமன்றத்தில் உள்ள தனது அறையில் ஜகதீப் தன்கரை அழைத்து அவரிடம் உரையாடினார்.
மாநிலங்களவை பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா, கிரண் ரிஜிஜூ, ராம்தாஸ் அத்வாலே உள்ளிட்ட மத்திய அமைச்சர்களும் எல்.முருகன் உள்ளிட்ட மத்திய இணை அமைச்சர்களும் உடன் இருந்தனர்.
Advertisement
Advertisement
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நாடாளுமன்ற மாநிலங்களவையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜூலை 3) பதிலளித்து உரையாற்றினார்.
எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை பேச அனுமதிக்காததைக் கண்டித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து மோடி பேசும்போது அவையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.