FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

இறுதிக்கட்டத்தில் பட்ஜெட் அறிக்கை: நாடாளுமன்றத்தில் அல்வா வழங்கும் நிகழ்ச்சி!

ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தயாரிப்புப் பணிகள் இறுதியானதும் அல்வா கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.

16 ஜூலை 2024, 6:36 pm IST
அல்வா வழங்கும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் - ஏ.என்.ஐ.
பகிர்:

2024 - 2025 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் ஜூலை 23ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், அல்வா தயாரிக்கும் நிகழ்ச்சி இன்று (ஜூலை 16) நாடாளுமன்றத்தில் நடைபெற்றது.

ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தயாரிப்புப் பணிகள் இறுதியானதும் அல்வா கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.

நிதிநிலை அறிக்கை தயாரிக்கும் அதிகாரிகளும் ஊழியா்களும் அறைக்குள் பூட்டப்படும் ‘லாக்-இன்’ நடைமுறை தொடங்குவதற்கு முன் அல்வா நிகழ்வு நடத்தப்படுகிறது.

Advertisement

Advertisement

இந்த நிகழ்ச்சியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இணை அமைச்சர், உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். வழக்கமான முறையில் பூஜை சடங்குகளையொட்டி தயாரிக்கப்பட்ட அல்வாவை அதிகாரிகளுக்கும் ஊழியா்களுக்கும் நிதியமைச்சா் வழங்கினாா்.

முன்னதாக நாடாளுமன்ற நிதியமைச்சகத்தில் உள்ள நார்த் பிளாக்கில் அல்வா கிண்டும் நிகழ்ச்சியை நிர்மலா சீதாராமன் தொடக்கி வைத்தார்.

பட்ஜெட் தயாரிப்புப் பணிகள் முடிவடைந்து அச்சிடும் பணி துவங்கியிருப்பதை அல்வா வழங்கும் விழா குறிப்பதாக கூறப்படுகிறது.

நிதி நிலை அறிக்கையும் ஆவணங்களும் தற்போது அச்சடிக்கப்படுவதில்லை என்றாலும் எண்ம (டிஜிட்டல்) வடிவிலான பணிகளுக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட நிதித் துறை அதிகாரிகளும் ஊழியா்களும் தங்கள் வீடுகளுக்கு செல்லாமல் வெளித் தொடா்பு இல்லாமல் இந்தத் தயாரிப்பு பணிகளில் ஈடுபடுவாா்கள்.

இந்த விழாவில், பட்ஜெட் தயாரிக்க உதவிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு நிர்மலா சீதாராமன் நன்றி தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments